அறிவு - சிந்தனை என்பது எங்கே தொடங்கியது ?
தெரியுமா விஞ்ஞானிகளுக்கு ?இவர்களை மிஞ்சியவர்கல்தான் சித்தர்கள் !!!!!!!!!!!!
வைத்தியம், வாதம், யோகம், ஞானம் ,என்ற நான்கு
துறைகளில் சித்தர்கள் ஆய்வு நடத்தயுள்ளனர் .ஒவ்வொரு துறையிலும் முற்றிலுமாக இதற்கு
அப்பால் இனி யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற அளவு ஆராய்ந்துள்ளனர்.
வைத்தியம் வாதம் என்ற இரண்டும் இக வாழ்வுச்
சார்புள்ளவை .இவ்வுலக வாழ்வுக்கு இன்றியமையாதவை.
ஒரு செடி ,கொடி ,புல் ,பூண்டு,எதை
எடுத்துக்கொண்டாலும் அதன் ஒவ்வொரு பாகமும் எத்தகு வேதியல் தன்மை கொண்டதாய் உள்ளது
.அது பசுமையாய் உள்ள போது இருக்கும் தன்மை என்ன ? உலர்ந்து போனபிறகு அடையும் தன்மை
என்ன ?இலை, பூ,,காய் ,கனி, தண்டு ,வேர் முதலிய ஒவ்வொரு பாகமும் எப்படிப்பட்ட
வேதியல் பொருளைக் கொண்டுள்ளது ? அதன் உறுப்புக்களில் ஒன்றுக்கொன்று மாறுபாடு உண்டா
இல்லையா ? என்ற அனைத்தையுமே ஆராய்ந்து பார்த்து , தெளிவான ,முடிவான உண்மைகளைக்
கண்டறிந்தனர் .
அதேபோல்
ஒரு உயிர்ப் பிராணியை எடுத்துக்கொண்டாலும் ,அதன் உடலில் உள்ள ஒவ்வொரு
பாகத்தையும் பற்றி ஆராய்ந்து முடிவு கண்டனர்.
அறிவியல் ஆராய்சியில் ஈடுபடுபவர் அரைகுறையாக
எதையும் செய்துவிடக்கூடாது .ஒரு சிறுபிழை கூட மொத்த முடிவுகளையுமே வீணாக்கிவிடும்
.
அறிவின் முளை எங்கிருந்து கிளம்பியது என்பதை
சிந்தனையாளர்கள் பலரும் அறிய முற்பட்டனர் .அவர்களுக்கு சரியான திசை தெரியாததாலேயே
கடவுள் படைத்தார் என்று கூறிச் சுலபமாக தப்பித்துக் கொள்ள முற்பட்டனர் .
அறிவு – சிந்தனை என்பது எங்கே தொடங்கியது ?
நிழலில் வைக்கப்பட்ட செடி சூரிய வெப்பத்தை நோக்கி வளைந்து முளைக்கிறதே? இது
அறிவின் செயல் இல்லையா ? பச்சோந்தி இலைகளின் நடுவே இருக்கும்போது பச்சை
வண்ணமாகவும் மரத்தின் மேல் இருக்கும்போது பழுப்பு வண்ணமாகவும் மாறிக்கொள்கிறதே அதுதான்
அறிவின் செயல் .
அறிவு என்பது உயிர் அரும்பத் தொடங்கியவுடனே
ஆரம்பித்துவிட்டது .துளிர் அசையத் தொடங்கியவுடனையே பிறந்துவிட்டது .இவ்வாறு
ஒவ்வொரு அணுவிலும் அறிவைக் கண்ட சித்தர்கள் இறைவனையும் கண்டனர்.
உயிரினத்தின் பரிணாம வளர்ச்சி மனிதனை
படைத்தவுடன் முடிந்து விட்டதாக மேல்நாட்டார் கருதுகின்றனர்.
இயற்கையின் வேலை ஒருபோதும் முடிவதில்லை ,அதை
யாராலும் நிறுத்தவும் முடியாது. பரிணாம வளர்ச்சியில் மனிதன் என்ற நிலையை தாண்டி
அப்பால் செல்ல வேண்டுமா ? அதை தெரிந்து கொள்ள வேண்டுமா ? அதற்கு வழி காட்டுகிறது
சித்தர்நெறி !!!!!அதுவே அதன் தனிப் பெருமை !!!!! அதன் சிறப்பு !!!!!
No comments:
Post a Comment