Thursday, June 18, 2015

மனைவயிடத்து இன்பமானாலும் அளவோடுதான் இருக்கவேண்டும் !!!!!!!!!



 மனைவயிடத்து இன்பமானாலும் அளவோடுதான் இருக்கவேண்டும் !!!!!!!!!



மனிதன் மன்னராக இருக்கலாம்; மகளிரை மணக்கலாம். அறநெறி தவறாமல் போரிடலாம். ஆனால் குறிக்கோளை விடாமல் இருக்க வேண்டும். கடமையை ஆற்றியபின் இறுதியில் முற்றும் துறந்து தவம் புரிதல் உயிரின் உயர்ந்த கடமை என்பதை இப்பெருங்காப்பியம் மக்களுக்கு உணர்த்துகிறது.

இங்கு ஒன்றை நினைவுபடுத்திக் கொள்ளலாம். சீவகனின் தந்தை சச்சந்த மன்னன் மிகு காமம் கொண்டதால் இறந்துபட்டான். மக்களின் தலைவனான மன்னன் நாட்டைச் சிறப்புற ஆளவேண்டும். அதுவே அவன் தலையாய கடமையாகும். கடமையை மறந்து மிகுந்த காமஉணர்வால் சிற்றின்பத்தில் மூழ்கியதால் அமைச்சரால் கொல்லப்பட்டான். 

அளவுக்கு மிஞ்சினால் உயிரைத் தரும் அமிர்தங்கூட விஷமாகி விடுமென்றால் காமத்தைப் பற்றிக் கூறுவானேன்

அவன் மூழ்கியது மனைவியின் இன்பத்தில்தான் என்றாலும் மிகுந்த காமஉணர்வு அவனை அழித்துவிட்டது எனலாம்.

 சமணக் காப்பியங்களில் எச்சரிக்கையாக அடிக்கடி இது வலியுறுத்தப்படுகின்றது. அதனாலேயே எண்ரை மணந்தும் இன்பத்தில் தன்னை இழக்காமல் மெய்யுணர்ந்து தவத்தினை ஆற்றி, வினைகளை வென்று வீடுபேற்றினை அடையும் சீவகன் வாழ்க்கை மற்றவர்க்கும் எடுத்துக்காட்டாய் அமைய வேண்டுமென்ற செய்தியை, திருத்தக்கதேவர் அறிவுறுத்துவார்.

 சமணம் இன்பத்தை முற்றுமாகப் புறக்கணிப்பதில்லை. மாறாக எல்லாவற்றையும் அனுபவித்தபின் பற்றுள்ளத்தைத் துறக்க வேண்டும். அப்போதுதான் வீடுபேறு கிட்டும் என்கிறது. அனைவராலும் துறத்தல் என்பது இயலாதது தானே?  

அதனால்தான் குறளாசான் நோற்பார் சிலர், நோலாதார் பலர்’ (குறள்:270) எனக் கூறிப் போகிறார். தவமும் தவமுடையார்க்கே ஆகுமல்லவா?.

                     குருவே சரணம் சரணம்

மும்மணிக் கோட்பாடு


மும்மணிக் கோட்பாடு:-

சித்திர கூடம் என்னும் இடத்தில் வாழும் தாபதர் என்ற துறவியருக்குச் சீவகன் அருகப் பெருமானின் மறைமொழிகளைப் பின்பற்றுமாறு அறவுரை கூறுகிறான். அந்த அறவுரையில் சமணக் கோட்பாடாகிய மும்மணிக் கோட்பாடு விளக்கம் பெறுகிறது.

மெய்வகை தெரிதல் ஞானம்
http://www.tamilvu.org/courses/degree/p202/p2023/images/p2023snd.gif
     விளங்கிய பொருள்கள் தம்மைப்
பொய்வகை இன்றித் தேறல்
     காட்சிஐம் பொறியும் வாட்டி
உய்வகை உயிரைத் தேயாது
     ஒழுகுதல் ஒழுக்கம் மூன்றும்
இவ்வகை நிறைந்த போழ்தே
     இருவினை கழியு மென்றான்
(சீவக.சிந்:1436)

ஞானமாவது உண்மையை அறிதல், காட்சியாவது அவ்வாறு அறிந்த பொருள்களைப் பொய்யின்றாகத் தெளிதல். ஒழுக்கமாவது ஐம்பொறிகளையும் ஐம்புலன்களில் செல்லாமல் கெடுத்து, உயிரைக் கெடாமல் அவ்வுயிர் உய்யும் வகையில் நடத்தல். மேற்கூறிய மூன்றும் நிறைந்தபோது இருவினையும் கெடும் என்றான்.
நல்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் என்று சொல்லப்படுவது மும்மணிகள் எனச் சமணசமயத்தில் வழங்கப்படும். அதை இரத்தினத்திரயம் என்றும் கூறுவர்.
இதே கருத்துப் பின்னர் சீவகன் துறவு வேண்டிச் சாரணரை அணுகிய போது, சாரணர் கூறிய அறிவுரையிலும் விளக்கப்பட்டுள்ளது.
பொருள்களுள் மெய்ப்பொருள் எது எனத் தெளிதல் ஞானம் ஆகும்.     தெளிந்த அம்மெய்ப் பொருளின் தன்மையை உணர்ந்தறிதல் காட்சி ஆகும். ஞானமும் காட்சியும் நீக்கமறத் தன்னுளே நிறைந்து விளங்க நடந்தொழுகுதல் ஒழுக்கம் ஆகும். இதை விளக்கும் பாடல்

உள்பொருள் இதுஎன உணர்தல் ஞானமாம்
http://www.tamilvu.org/courses/degree/p202/p2023/images/p2023snd.gif
தெள்ளிதின்அப்பொருள் தெளிதல் காட்சியாம்
விள்அற இருமையும் விளங்கத் தன்னுளே
ஒள்ளிதின் தரித்தலை ஒழுக்கம் என்பவே
(முக்தி இலம்பகம் : 2845)    


                                                            குருவே சரணம் சரணம்